வி. ராஜா என்கிற புதுமுக தயாரிப்பாளரின் தயாரிப்பில் உருவாகி உள்ளது “அருவா சண்டை”. ஆதிராஜன் இயக்கத்தில் சரண்யா பொன்வண்ணன் லீட் ரோலில் நடித்து உள்ளார். இவர்களோடு மாளவிகா மேனன், சௌந்தர் ராஜா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
தரன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சரண்யா பொன்வண்ணன் அவர்களை கடுமையாக சாடி உள்ளார். படத்தின் புரோமோசனுக்காக அழைத்த போது அவர் வர மறுத்து விட்டார் என்று வேதனையோடு கூறி உள்ளார்.
இதுவே பெரிய தயாரிப்பாளர்கள் அல்லது பெரிய நடிகர்கள் என்றால் வந்திருப்பார் என்றும் கூறினார். பல முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த விழாவுக்கு வந்து பேசிய நிலையில், அவர்களும் தங்கள் வேதனையை பதிவு செய்து உள்ளனர்.