Mnadu News

பா.ஜ.க. தலைவர்கள் நலனுக்கு எல்.ஐ.சி., வங்கிகளின் பணம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.

மேற்கு வங்காள புர்பா பர்தமான் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, எல்.ஐ.சி. மற்றும் தேசிய வங்கிகளில் போடப்பட்டுள்ள மக்களின் பணம் எடுக்கப்பட்டு பா.ஜ.க.விலுள்ள சில தலைவர்கள் பலன் அடைவதற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், பங்கு சந்தை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்து விட்டது என குற்றம் சாட்டிய அவர், சிலருக்கு தொலைபேசி வழியே அழைப்பு விடுத்து, ஆயிரக்கணக்கான கோடி தொகையை முதலீடு செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். பட்ஜெட் முழுவதும் பொய்கள் நிறைந்தது என கூறிய அவர், 2024 பொது தேர்தலை கணக்கில் கொண்டே மத்திய அரசு பட்ஜெட் தயாரித்து உள்ளது என மம்தா கூறியுள்ளார்.

Share this post with your friends