சிவகார்த்திகேயன் எனும் கலைஞன்:
தன்னை தானே பட்டை தீட்டி வளரும் நடிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் அதாவது SK வுக்கு என்றும் தனி இடம் மக்கள் மத்தியில் உண்டு. ஆம், தொடர்ச்சியான முயற்சிகளை மட்டுமே மூலதனமாக கொண்டு செயல்படும் உழைப்பாளி SK. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் இவருக்கு உண்டு. அதே போல குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டர்டம் இடத்துக்கு வந்தவர் என்று சொன்னாலும் அது மிகையாகாது.
மாவீரன்:
SK நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஜூலை 14 அன்று வெளியாக உள்ளது “மாவீரன்”. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே படத்துக்கான ஹைப் ரசிகர்கள் மத்தியில் உருவாக துவங்கியது. மேலும், படத்தின் இரண்டு பாடல்கள் தற்போது வரை வெளியாகி உள்ள நிலையில், விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SK 21:
மாவீரன் படத்துக்கு பிறகு ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் SK நடித்து வருகிறார். இதற்காக அவரது உடலையும் கட்டுக் கோப்பாக மாற்றி உள்ளார். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
SK 22 :
சிவகார்த்திகேயன் தமது 21 வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் உடன் பணியாற்றி வேண்டிய சூழல் இருந்த நேரத்தில், அந்த படம் ட்ராப் ஆனது. ஆனாலும், தமது அடுத்த படமான 22 வது படத்தில் நிச்சயம் பணியாற்ற போவதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக “சீதா ராமம்” படத்தில் கதாநாயகியாக நடித்த மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.