Mnadu News

சிவசேனை பெயர், சின்னம்: உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு.

மகாராஷ்டிரத்தில் முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணி, முன்னாள் முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே அணி என இரண்டாக உள்ளது. இதில் எது உண்மையான சிவசேனை அணி என இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடின. பெரும்பான்மையின்படி, முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான், உண்மையான சிவசேனை என்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதோடு, கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், மகாராஷ்டிரத்தில் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இத்தேர்தல் முடியும் வரை உத்தவ் தாக்கரே அணியினர் ‘சிவசேனை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதுகுறித்து உத்தவ் தாக்கரே கொடுத்துள்ள மனு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More