Mnadu News

சிவசேனை விவகாரம்: டிச. 2-ல் தேர்தல் ஆணையம் விசாரணை.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ{டன் கூட்டணி வைத்திருந்த காரணத்தால் சிவசேனையில் இருந்து விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை மாற்றினர். ஆவர்கள் சிவசேனையின் கட்சிப் பெயரையும், சின்னத்தையும் கோரியதால், தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி சின்னத்தை முடக்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், சின்னம் தொடர்பான சர்ச்சை வழக்கை டிசம்பர் 12ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதோடு, இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை டிசம்பர் 9 மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends