சிவமோகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் பங்களிப்புகளால் சிவமோகா விமான நிலையப் பணிகள் நிறைவேறியதாகக் கூறினார். ,மூத்த பாஜக தலைவர் தனது பெயரை விமான நிலையத்திற்கு சூட்டுவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்ட பொம்மை, அவரது பெயரை சூட்டுவதற்கு மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து விரிவானை அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என பசவராஜ் பொம்மை கூறினார். விமான நிலையம், 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. “விமான நிலையத்திற்கு எனது பெயரை சூட்ட முடிவு செய்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், ஆனால் நாட்டிற்கு சேவை செய்த மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த ஏராளமானோர் உள்ளனர். விமான நிலையத்திற்கு எனது பெயரை வைப்பது சரியான முடிவு அல்ல என்று நான் கருதுகிறேன், மேலும், அந்த முடிவை மறுபரிசீலனை செய்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்த ஒருவரின் பெயரை அதற்கு பெயரிடுமாறு கேட்டுக்கொள்கிறேன், ”என்று எடியூரப்பா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவின் கடிதம், மாநில அரசின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, விமான நிலையத்திற்கு குவெம்பு, ஜி எஸ் சிவருத்திரப்பா அல்லது யு ஆர் அனந்தமூர்த்தி போன்ற இலக்கிய ஜாம்பவான்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று பலர் பரிந்துரைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு சிவமோகா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயரை சூட்டுவதற்கு மாநில அரசு முதன்முதலில் முன்வைத்தபோது, அது “பொருத்தமற்றது” என்று கூறி அதற்கு பெயர் வைக்க வேண்டாம் என்று முதல்வர் பொம்மையை எடியூரப்பா வலியுறுத்தினார், மேலும், வேறு எந்த கர்நாடக ஆளுமையின் பெயரை சூட்டுமாறு பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று,...
Read More