Mnadu News

சி.பி.ஐ.யை கொடுங்கள், மோடி, அதானியை கைது செய்கிறேன்: ஆம் ஆத்மி எம்.பி. மிரட்டல்.

டெல்லியில் முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழலில் துணை முதல்-அமைச்சர் மணிஷ் சிசோடியா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. எனினும், சி.பி.ஐ. அமைப்பின் இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், உள்ளிட்ட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து, சிசோடியாவை சி.பி.ஐ. அமைப்பு கைது செய்தது.இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோரை போலீசார் விடுவித்தனர். இதன்பின்னர், செய்தியாளரிடம் பேசிய சஞ்சய், டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என்றார்.அதே நேரம், என்னுடன் சி.பி.ஐ. அமைப்பு மற்றும் அமலாக்க துறை ஆகியன இருந்தால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தொழிலதிபர் அதானியை 2 மணிநேரத்தில் கைது செய்வேன் என்று மிரட்டல் விடுத்து பேசினார்.

Share this post with your friends