சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காலை 7.50 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது.

சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
சின்ஜியாங்கில் உள்ள விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்த பயணிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் பயந்து அங்கிருந்து வெளியே ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதில் எந்தவித அசம்பாவிதங்கள் நிகழவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.