கடந்த சில நாட்களாக ஒயிந்து வந்த கொரோனா தொற்று சீனாவில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் சுமார் 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அதே போல கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 2,105 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,704 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக பதிவாகி உள்ளது.

மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,59,438 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.