உலகத்தையே தன் பிடியில் வைத்துள்ள கொரோனா முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு வூகான் நகரில் தான் முதல் தொற்று ஏற்பட்டது.

இந்த கோர பிடியில் இருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வரும் நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

சுமார் மூன்று ஆண்டுகளாக பிரத்யேக வோவிட் திட்டத்தின் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை ஒழிக்க சீன அரசு போராடி வந்தது.

இந்நிலையில், மீண்டும் வூஹானில் கொரோனா அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் சுமார் 9 லட்சம் பேர் வசிக்கும் ஹன்யாங் மாவட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வரும் ஞாயிற்றுக் கிழமை வரை இந்த ஊரடங்கு தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய கடைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் டடோங், குவான்சு நகரங்களிலும் பொது முடக்கங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
