Mnadu News

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி: வனத்துறை அறிவிப்பு.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணி ஒருவர் மீது காய்ந்த மரக்கிளை விழுந்தில் அவர் உயிரிழந்தார். இதன் எதிரொலியாக கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை செய்து, அருவி பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.அதையடுத்து,சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ள வனத்துறை கண்காணிப்பும் செய்து வருகின்றது.

Share this post with your friends