வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சுருளி அருவியின் நீர்வரத்து பகுதிகளான அரிசி பாறை, ஈத்தைப்பாறை பகுதி ஓடைகளில் நீர்வரத்து அதிகமாகி, அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது.
முதல் நாளான நேற்று குளிக்கத் தடை விதித்த நிலையில் இரண்டாவது நாளாக இனறும்; வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஸ்ரீPவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதித்தனர்.
அருவி பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சிலர் சுருளி ஆற்றில் குளித்துச் சென்றனர்.அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவ வனத்துறையினர் தெரிவித்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More