சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: கடலூரில் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் பேசவில்லை. 3 நாட்களாக பொய்யான விஷயத்தை பரப்புகின்றனர். …
மத்திய அரசின் எச்சரிக்கை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சட்டசபை குழு போட்டு விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதனை முதல அமைச்சர்; ஏற்க தயாரா? ஆட்சிக்கு வந்த பிறகு சிலர் மீது போட்ட கண்காணிப்பு ஏன் நீக்கப்பட்டது. மற்றவர்களிடம் விளையாடுவது போல் என்னிடம் விளையாட வேண்டாம் என சாராய அமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்களிடம் தெரிவித்து கொள்கிறேன்.
முதல் அமைச்சருக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. அண்ணாமலை முஸ்லிம்களுக்கு எதிராக பேசுகிறார். அதிகமாக பேசினால், இந்துக்கள் கொந்தளித்து,அவர்களின் சொத்துகளை சேதப்படுத்திவிட்டு, முஸ்லிம்கள் மீது பழியை போடுவார்கள்.இதனால் அண்ணாமலையை கண்காணிக்க வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளனர்.என்ன மாதிரியான அறிக்கை இது. உள்துறை மீது கவனம் இல்லை. தேசவிரோத சக்திகள் மீது கண்காணிப்பு இல்லை. முதல் அமைச்சர் நல்லவராக இருந்தாலும், சுற்றி இருப்பவர்களை நல்லவர்களாக வைத்து கொள்ள வேண்டும்..உங்களை சுற்றி உள்ளவர்களை ஆராய வேண்டும்.உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை முதல் அமைச்சர்; உணர வேண்டும். தமிழகத்தில் மீண்டும் தாக்குதல் நடந்து விடக்கூடாது.
திண்டுக்கல் காந்திகிராம பல்கலை விழாவிற்கு நவம்பர் மாதம் ,11இல் பிரதமர் மோடி வருகிறார். இது குறித்து கூடுதல் தகவல…பிறகு வெளியிடப்படும். என்று அண்ணாமலை கூறி உள்ளார்.
.