Mnadu News

சுற்றுச்சுவர் சர்ச்சை: மாநகராட்சிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி, ஜே.எம்.ஹாரூனின் வாரிசுகளான வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா உள்ளிட்ட அவரது சகோதர, சகோதரிகளுக்கு சொந்தமாக எருக்கஞ்சேரியில் 18 ஆயிரத்து 207 சதுர அடி நிலம் உள்ளது. அந்த நிலத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் , அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாககூறி, அதனை இடிப்பதற்காக கடந்த 4ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி, அசன் மவுலானா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் நீதிபதிகள் அனிதா சுமந்த், நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாநகராட்சியின் நோட்டீசுக்கு தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More