Mnadu News

சுற்று சூழலுக்கு தீங்கு :லண்டனில் ஆரஞ்சு பெயிண்டை ஊற்றி; போராட்டம்.

இங்கிலாந்தில் சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் புதை வடிவ எரிபொருளை உற்பத்தி செய்யும் எண்ணெய் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தலைநகர் லண்டனில் உள்ள எரிவாயு நிறுவனத்தின் கட்டடத்தின் மீது ஆரஞ்சு பெயிண்டை ஊற்றி சூழலியல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டடத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சூழலியல் ஆர்வலர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சிலரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share this post with your friends