Mnadu News

சூடான் மோதல்: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய யுனிசெஃப் வலியுறுத்தல்.

கடந்த இரண்டு மாதங்களாக சூடானில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்குமிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இவர்களது இந்த சண்டையில் 958 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் இதை விட உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. ,இது குறித்து பேசியுள்ள யுனிசெஃப்,சூடானின் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் நடைபெறும் இந்த அதிகாரப் பகிர்வு மோதலில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலுக்கும் குழந்தைகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால், இவர்களுக்கு இடையேயான மோதலில் சிக்கி குழந்தைகள் காயமடைகின்றனர், துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர், நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டுக்கும் குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த இரண்டு மாத மோதலில் 20 லட்சம் மக்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்து இடம் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தின் பாதியிலிருந்து இதுவரை 71 குழந்தைகள் பசியினால் உயிரிழந்துள்ளனர்.எனவே, இருத்தரப்பினரும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கூறி உள்ளது.

Share this post with your friends