Mnadu News

சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் பானஸ்க்கு ட்ரீட்! விட்டதை பிடிக்கபோகும் தலைவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் 2002 ஆம் ஆண்டு வெளியானது “பாபா”. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகி ரஜினிகாந்த் கலை வாழ்வில் பெரும் நஷ்டத்தை கொடுத்தது “பாபா”.

போர் அடிக்காத ஸ்கிரீன் பிளே, சிறந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை, சிறந்த நடிகர்கள் தேர்வு என அனைத்தும் அழகாய் அமைந்தது இப்படத்துக்கு. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு கூட இப்படம் பிடிக்காமல் போனது.

பாபா வெளியாகி 20 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தை சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் வெளியிட ரஜினி சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள சொல்லியுள்ளார்.

இதனால் பாபா படம் டிசம்பர் 12 அன்று புது பொலிவுடன் வெளியாவது உறுதி என்றும் சொல்லப்படுகிறது. இதன் டப்பிங் பணிகள் முடிந்துள்ளது என சூப்பர் ஸ்டார் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். அதே போல பாபா ரி ரீலீஸ் ஆனாலும் கூட 4 மணிக்கு ரசிகர்கள் ஷோ போட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Share this post with your friends