ஹரியாணா மாநிலத்தில் சூரியகாந்தி சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என குருக்ஷேத்ரா பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.இது தொடர்பாக பல வழிகளில் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி குருக்ஷேத்ராவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவரான ராகேஷ் திகைத் தலைமையில் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More