சூரியா:
சூறரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்களை சமீபத்தில் கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். குறிப்பாக, ஹீரோ என்கிற அந்த இமேஜ் ஐ உடைத்து அவர் செய்த சம்பவத்தின் பலனாக விருது மேல் விருதை இரு படங்களும் பெற்றன. இதற்கு அடுத்த படியாக சூரியா யாருடன் என்ன மாதிரி கதையை தேர்வு செய்து நடிக்க போகிறார் என்கிற எக்ஸிட்மெண்ட் இருந்து வந்தது. அதற்கு விடை தான் “கங்குவா”.
புதுமையான கதைக்களம் :
கங்குவா மொழிகள்ல வெளியாக இருக்கு. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி யோகி பாபு, கோவை சரளா போன்ற பல முக்கிய நடிகர்கள் முக்கியமான ரோல்களில் நடிக்கிறார்கள். தேவி ஶ்ரீ பிரசாத் இசையில விவேகா, மதன் கார்க்கி பாடல்கள் எழுத, மதன் கார்க்கி வசனங்களும் எழுதி உள்ளார்.
2000 வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஒரு ஃபேண்டஸி ஸ்டோரி தான் கங்குவா. கோவா உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், இப்போ இரண்டாவது கட்ட ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படம் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
அடுத்த படம் என்ன ?
வாடிவாசல் படம் எப்போதோ துவங்கப்பட்டு இருந்தாலும், வெற்றி மாறன் மிகவும் பிஸியாக உள்ளதால் அதன் ஷூட்டிங் தள்ளி கொண்டே செல்கிறது. ஆம், விடுதலை பார்ட் 2 பணிகளில், அடுத்த படியாக வட சென்னை 2 போன்று பல படங்கள் உள்ளதால் வெற்றி மாறனும் பிஸியாக உள்ளார். இதனால், சூரியா சுதா கொங்காரா உடன் ஒரு படத்தை முடித்து விட்டு வாடி வாசலை துவங்கலாம் என கூறி உள்ளார் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கும் ஜி வி பிரகாஷ் குமார் தான் இசை அமைபார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.