Mnadu News

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடைகோரி வழக்கு: ஜூலை 7-க்கு ஒத்திவைப்பு.

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகளை இரு அமைச்சர்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அத்துடன்;, செந்திலபாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் எனவும் அறிவித்தது.இந்நிலையில், செந்தில்பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும், அமலாக்கத் துறை வழக்கை எதிர்கொண்டுள்ள செந்தில்பாலாஜி, அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ள சூழலில், அவர் பதவியில் நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் அதிமுகவின் முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது.அதோடு, முதல் அமைச்சர் மற்றும் ஆளுநருக்கு இடையேயான கடித போக்குவரத்து குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது எனத் தெரிவித்து வழக்கில் விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share this post with your friends