தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி முதல் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ,இந்த நிலையில், மழை பற்றிய தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் தமிழகத்தின் மத்திய கடலோர, தெற்குக் கடலோர மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்கிவிடும். வடக்கு கடலோர தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 31 முதல் நவம்பர மாதம் முதல் வாரம் வரை மிகப்பெரிய மழை நாள்கள் காத்திருக்கின்றன.கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தைப் போலவே இந்த ஆண்டு நவம்பர் மாதமும் மிகச் சுறுசுறுப்பாக இருக்கப் போகிறது என்று பதிவிட்டுள்ளார்.
.