சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 4 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் – 7 புள்ளி 7 செ.மீ ,நந்தனம் – 5 புள்ளி 2 செ.மீ ,பூந்தமல்லி – 4 புள்ளி 5 செ.மீ காரைக்கால் – 7 செ.மீ மழையும், நாகை – 4 புள்ளி 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது.