Mnadu News

சென்னையில் ஒரு நாள் பட பாணியில், 15 நிமிடத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்ட உடல் உறுப்புகள்

மதுரையை சேர்ந்த 28 வயதான முத்து சங்கர் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் முத்து சங்கரின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். அதனைத்தொடர்ந்து இன்று காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் 10:40 மணிக்கும் மற்றொரு ஆம்புலன்ஸ் 10:50 மணிக்கும் புறப்பட்டு சரியாக 15 நிமிடத்தில் மதுரை விமான நிலையம் சென்றடைந்தது. முத்து சங்கரின் லிவர் மட்டும் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது. குறிப்பாக தகவல் தெரிவித்த பத்து நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்த மதுரை மாநகர போக்குவரத்து காவலர்கள் மற்றும் அவசர ஊர்தி ஓட்டுனர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Share this post with your friends