மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரரின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்னை வந்த மம்தா பானர்ஜி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, இன்று காலை இல.கணேசன் இல்ல விழாவிற்கு சென்ற மம்தா பானர்ஜிக்கு, கேரள செண்டை மேளம் வாசித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக செண்டை மேளத்தை வாங்கிய மம்தா, கலைஞர்களுடன் இணைந்து வாசித்தது அங்குள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி செண்டை வாசிக்கும் விடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More