மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி முடிவடையும் நிலையில் நான்கு நாட்கள் இடைவெளியில் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.தனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று தோனி வெளிப்படையாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அவர் சென்னைக்கு பயிற்சிக்காக வருகை புரிந்துள்ளார்.அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், ரஹானே ஆகியோர் சென்னையில் ஏற்கெனவே பயிற்சியை தொடங்கியுள்ளனர். அவர்களுடன் தோனியும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...
Read More