சென்னையில் சூடுபிடிக்கும் விபச்சார தொழில்:
வளர்ந்து வரும் இந்த டெக் உலகில் பல வித விதமான பலே வேலைகளும் அவ்வாறே அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, ஆன்லைன் மோசடி, விபச்சரம் என இவற்றை கூறலாம். அதிலும், இப்போது சென்னையில் ட்ரெண்ட் ஆகி வருகிறது குடும்ப விபச்சாரம். ஆம், ஷாக் ஆக வேண்டாம் வெறும் 5000 ஆயிரம் கொடுத்தால் போதும் இவர்கள் ஒரு நாள் முழுக்க அந்த கஸ்டமருக்கு சேவை வழங்குவார்களாம்.
யார் அவர்கள் :
வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடுவது போல் பெண்கள் வருவார்களாம். அவர்கள், சென்னையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வீடு வாடைக்கு எடுத்து, தங்கி இதில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது. இதில் ஈட்டும் பணத்தை எடுத்து கொண்டு ஊருக்கு புறப்பட்டு விடுவார்கள். அப்படி இவர்கள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டால் அதற்கும் இவர்கள் பிளான் வைத்துள்ளனர் என கூறப்படுகிறது.
காவல்துறையின் ரெய்டு:
சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிபாக்கம் பகுதிகளில் குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசாரின் ரெயிடில் இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு உள்ளனர் அவர்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர் . அதே போல இரண்டு ப்ரோக்கர்கள் சிக்கி உள்ளனர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.