சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. ஒரு சில பகுதியில் மரங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில், கனமழைக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். புளியந்தோப்பில் உள்ள பிரகாஷ் ராவ் காலனியில் வசிக்கும் 47 வயதான சாந்தி வீட்டின் பால்கனியின் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் வியாசர்பாடியில் 52 வயதான ஆட்டோ ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். குடிபோதையில் இருந்த தேவேந்திரன், திங்கள் இரவு வியாசர்பாடி பிவி காலனியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, தெருவில் தேங்கியிருந்த மழைநீரில் நடந்துசென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More