சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,தென் இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது தொடர்வதால், தமிழகத்தில் திடீர் மழை பெய்து வருகிறது.தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில், வரும் 22-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...
Read More