Mnadu News

சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் இருந்து வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம், பரிசுப் பொருட்களை கொடுக்கும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன.

தேர்தல் நடத்தை விதியின்படி தனி நபர் ஒருவர் தன்னுடன் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு செல்லக்கூடாது. அப்படி யாராவது கொண்டு சென்றால் அதற்கு தகுந்த ஆதாரங்களை, அதாவது அந்தப் பணம் தன்னுடையதுதான் என்பதற்கான ஆதாரங்களை உடன் வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்பேரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஏழுகிணறு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்துராம் சௌத்ரி என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More