Mnadu News

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு.

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் கடந்த மார்ச் மாதம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் இந்த 4 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்திருக்கிறது.

Share this post with your friends