Mnadu News

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்ற கொலீஜியம் பரிந்துரை.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த வந்த முனீஸ்வர் நாத் பண்டாரி கடந்த செப்டம்பர் மாதம்; 12-இல் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், அவரும் ஓய்வுபெற்றார்.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா கடந்த செப்டம்பர் மாதம் .22ஆம் தேதி பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக முரளிதரனை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ள நிலையில், இன்னும் அனுமதி வழங்கவில்லை.
இதனால், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

Share this post with your friends