சென்னையில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் உள்ளிட்டவை கொண்டு வருவதற்கும், சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் தரைவழிப் போக்குவரத்தே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் சென்னையிலிருந்து திருச்சி, புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே இருந்து வருகிறது. இந்த நிலையை தவிர்க்க புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சரக்கு கப்பல் சேவை வேண்டும் என்று தொழில் முனைவோர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, சென்னை – புதுச்சேரி சரக்கு கப்பல் சேவையை சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தொடங்கி வைத்தார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More