எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பகுதிகளில் மழை நீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வந்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்தும் தண்டவாளங்களில் எந்த பாதிப்பும் இல்லை.
தெற்கு ரயில்வே மேலாளரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் விடியோவுடன் தகவல் பதிவிடப்பட்டுள்ளது.அதில், கடந்த ஓராண்டாக எழும்பூர் ரயில் நிலையம் பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக நிலைமை மேம்பட்டுள்ளது.
இதனால், தண்டவாளப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல், வழக்கம் போல, ரயில்கள் அனைத்தும் அதன் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதுபோன்று, ஒன்றிணைந்து இதர ரயில் நிலையங்களிலும் பணியாற்றுவோம் என்று நம்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
,நன்றி சென்னை மாநகராட்சி. இதுபோல தண்ணீர் தேங்கும் பிரச்னை இருக்கும் ரயில் நிலையங்களிலும் ஒன்றிணைந்து செயல்பட்டு விரைவில் தீர்வு காண வேண்டும், மழைக்காலங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த திட்டப் பணியில், நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து உதவி செய்திருக்கிறது. அவர்களுக்கும் நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.