தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தெற்கு ரயில்வேயில் 2,485 கிலோ மீட்டர் தொலைவு பாதையில் 110 கிலோ மீட்;டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில்,தெற்கு ரயில்வேயில் சென்னை- ரேணிகுண்டா, அரக்கோணம்-ஜோலார்பேட்டை ஆகிய 2 முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 130 கிலோ மீட்டர் ஆக ரயில்களின் வேகம் அதிகரிகரிக்கப்பட உள்ளது. இதுதவிர 5 வழித் தடங்களில் மணிக்கு 110 கி.மீ வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- தெற்கு ரெயில்வேயில் தற்போது சில வழித்தடங்களில் மட்டும் ரெயில்கள் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் மணிக்கு 145 கி.மீ வரை வேகத்தை அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை-கூடூர் வழித்தடத்தில் முதன்முறையாக 130 கி.மீ வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சென்னை-ரேணிகுண்டா வழித்தடத்தில் மார்ச் மாத இறுதிக்குள் ரெயில்களின் வேகத்தை 130 கி.மீ ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் வரும் ஜூன் மாதத்துக்குள் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். மேலும் விருத்தாசலம்-சேலம், விழுப்புரம்-புதுச்சேரி உள்பட சில வழித்தடங்களில் 110 கி.மீ வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி-தென்காசி, சேலம்-கரூர், திண்டுக்கல்-பொள்ளாச்சி, மதுரை-வாஞ்சிமணியாச்சி உள்ளிட்ட 5 வழித்தடங்களில் 110 கி.மீ வரை வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. என்று அவர்கள் கூறினர்.

சிறை தண்டனை விதிப்பு: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு...
Read More