விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளதாவது:வெளிநாடு, வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது உடைமைகளை, சம்மந்தப்பட்ட விமான நிறுவன அலுவலகத்தில் பதிவு செய்து அனுப்புவர்.அவ்வாறு அனுப்பப்படும் உடைமைகள், பாதுகாப்பு சோதனை முடிந்த பின்னர், விமானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பாதுகாப்பு சோதனையின்போது அந்த உடைமைகளில் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட பயணியை அழைத்து அதை வெளியே எடுக்க அறிவுறுத்தப்படுவார்கள்.அதோடு, தற்போது, பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்தவாறே, தங்களது உடைமைகளை, பயணிகள் அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வீடியோ வாயிலாக உடைமைகளை அடையாளப்படுத்தி, அவர்கள் அனுமதியுடன் அவர்கள் கண் முன்பே தடை விதிக்கப்பட்ட பொருள்கள் அகற்றப்படும்.இதன் மூலம் பயணிகளும் நேரம் விரயம் தடுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More