சைவ – அசைவ உணவு வகைகளை தாண்டி, இறைச்சி மற்றும் பால் பொருட்களை தவிர்க்கும், ‘வேகன்’ என்ற உணவு முறை உலகம் முழுதும் வளர்ந்து வருகிறது. இந்த உணவுமுறை, சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்திற்கும் சிறப்பான பலனை தரும் என, இதை பின்பற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், செயற்கை முறையில் இறைச்சி தயாரிக்கும் சந்தையும் வளர்ச்சி அடைய துவங்கி உள்ளது. அதாவது, ஒரு விலங்கின், ‘செல்’களை சோதனை கூடத்தில் வைத்து பராமரித்து வளர்த்து, அதை இறைச்சியாக தயாரிக்கும் முறையை தான், சோதனைக்கூட இறைச்சி என அழைக்கின்றனர்.இந்த வகையில், அமெரிக்காவில் சோதனைக்கூட கோழி இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோழிக்கு உயிர் கிடையாது. ‘செல்’களை வைத்து கறிக்கு தேவையான பாகங்களை மட்டும், தேவையான வடிவத்தில் உருவாக்கிக் கொள்கின்றனர்.இந்த சோதனைக்கூட கோழி இறைச்சியை சந்தையில் விற்பனை செய்ய, அமெரிக்க விவசாயத்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More