Mnadu News

செயலற்ற பீகார் அரசைப் பற்றி நிதிஷ் கவலைப்படட்டும்: பிரசாந்த் கிஷோர் அதிரடி தாக்கு.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் சந்தித்து பேசி வருகிறார்.இந்நிலையில்,பீகாரில் செய்தியாளர்களிடையே பேசியுள்ள தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர்,பீகாரை பற்றி முதலில் நிதிஷ் குமார் கவலைப்படட்டும்.ஏனெனில், பீகார் செயலற்ற அரசாக முடங்கி போயுள்ளது.அதே சமயம், தேஜஸ்வி யாதவ் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பேசும்போது, 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என கூறினார். அவரால் அப்படி 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்க முடியாது என்று ஒவ்வொருவருக்கும் தெரியும்.அதே நேரம், லாலு பிரசாத்தின் மகனாக தேஜஸ்வி யாதவ் இல்லையென்றால், நாட்டில் அவருக்கு என்ன வேலை கிடைத்து இருக்கும்? என்றும் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Share this post with your friends