Mnadu News

செலவு கணக்கு காட்டாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு.

நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் செலவு கணக்கை 30 நாட்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம்; தாக்கல் செய்ய வேண்டும். அதை தாக்கல் செய்ய தவறும் வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு கணக்கை காட்டாத சில வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் பிரபுவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிடப்பட்டது. அத்துடன்;, சங்கரன்கோவில் தொகுதி சுயேச்சை வேட்பாளர் பாலமுருகேசன், அவிநாசி தொகுதி சுயேச்சை வேட்பாளர் சகுந்தலா, சைதாப்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் இளங்கோ, வெங்கடேஷ், விருகம்பாக்கம் தொகுதி அண்ணா திராவிட மக்கள் கழக வேட்பாளர் தினேஷ்குமார் ஆகியோருக்கும் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More