திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் அருகே உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி இளைஞர் ஒருவர் பாஜக மற்றும் தேசிய கொடியை ஏற்றி தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இளைஞரை கீழே இறங்கி வரும்படி கூறினர்.

அதற்கு மறுத்த அந்த இளைஞரிடம் தொலைபேசி வாயிலாக திண்டுக்கல் நகர் டி எஸ் பி கோகுலகிருஷ்ணன் பேசினார். அப்போது தெரிவித்த அவர் தான் பொன்னருவி பகுதியை சேர்ந்த மூக்கையா என்றும் தான் வாங்கிய கடனுக்கு ஈடாக தனி நபர் ஒருவர் தனது விவசாய நிலத்தை பறித்து விட்டதாகவும், இதுகுறித்து பலமுறை காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி மூக்கையாவை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் கீழே இறங்க வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.