கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, 4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்லிடபேசியை பெற்றோர் ஒப்படைக்க வில்லை என்றும், வழக்கு விசாரணை 2 மாதங்களில் நிறைவடையும் என்றும் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் செல்லிடப்பேசியை பெற்றோர், விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில், அவர் பயன்படுத்திய செல்லிடப்பேசியை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிடில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.
ஏற்கனவே, இது தொடர்பாக காவல்துறை நீதிமன்றத்தில் வைத்த முறையீட்டின்போது, நியாயமான விசாரணை நடைபெற, மரணமடைந்த மாணவி பயன்படுத்திய செல்லிடப்பேசியை, காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், பெற்றோர் செல்லிடப்பேசியை ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More