கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த இருவர் முறைப்படியாக திருமணம் செய்யாமல் லிவ்-இன்-ரிலேஷன்சிப்பில் வாழ்வதென கடந்த 2006-ஆம் ஆண்டு; முடிவெடுத்து வாழ்கை நடத்தி வந்தனர். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில், அந்த தம்பதியினர் உறவை முறித்துக் கொள்ள விரும்பியதையடுத்து, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பரஸ்பர விவாகரத்துக்கான கூட்டு மனுவுடன் அவர்கள் குடும்பநல நீதிமன்றத்தை அணுகினர். ஆனால், அவர்கள் அந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறி விவாகரத்து வழங்க குடும்பநல நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து, அந்த தம்பதிகள் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினர்.இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் ஏ. முகமது முஸ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ,மனுதாரரின் லிவ்-இன்ரிலேஷன்சிப் உறவு இன்னும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட முறைப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே விவாகரத்து வழங்க சட்டத்துக்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கு அதற்கு பொருந்தாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More