Mnadu News

சேலம் புத்தகத் திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு.

தமிழகத்தில் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் சேலம் புத்தகத் திருவிழாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.
புத்தக திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள், ரூ. 10 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலான புத்தகங்கள், கலை இலக்கியம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், முற்போக்கு, அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கான நூல்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்வு புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்றுடன் நிறைவடைய இருந்த சேலம் புத்தகத் திருவிழாவை டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் அறிவித்துள்ளார்.

Share this post with your friends