ராஜஸ்தான் மாநிலம் நத்வாராவில் நடந்த விழாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதையடுத்து, நிகழ்ச்சியில் பேசியுள்ள ராஜஸ்தான் முதல் அமைச்சர்; அசோக் கெலாட், “நமது அரசின் நல்லாட்சியால் நாட்டின் பொருளாதார வளச்சியடைந்த மாநிலங்களில் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நமது மாநிலத்தில் நிறைவேற்றப்படாமல் மீதமிருக்க கூடிய திட்டங்கள் குறித்து நான் உங்களுக்கு அதாவது பிரதமர் மோடி கடிதம் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன். ஜனநாயகத்தில் பகையாளிகள் என்று யாரும் இல்லை. இது கருத்தியலுக்கான யுத்தம். நாட்டு மக்களிடம் எப்போதும் அமைதியும் ஒற்றுமையும் நிலவ வேண்டும். வன்முறை வளர்ச்சியை பாதிக்கிறது. எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஒரு அரசு சிறப்பாக செயல்பட முடியாது. எதிர்க்கட்சிகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசி உள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More