வாரிசு படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எப்படி உயர்ந்து வருகிறதோ அதே அளவு எதிர்பார்ப்பு விஜய் 67 படத்துக்கும் எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் தான் இயக்க போகிறார் என்கிற தகவல் உறுதி ஆகி உள்ள நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஜனவரியில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என லோகேஷ் நேற்று லத்தி டிரெய்லர் வெளியீடு விழாவில் உறுதி செய்துள்ளார்.

இதில் விஷால் வில்லன் ரோலில் நடிப்பதாக இருந்த நிலையில், அந்த வாய்ப்பை அவர் மறுத்து விட்டதாக அவரே உறுதி செய்துள்ளார். மற்ற படங்களின் பணிகள் உள்ளதால் வேறு வழி இன்றி இந்த நல் வாய்ப்பை வேண்டாம் என சொல்லும் நிலை உருவானது என்றார்.

கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக அனிருத் விஜய் படத்துக்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
