Mnadu News

ஜனவரி மாதம் 9-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.

செய்தியாளர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்ததாவது: ஜனவரி மாதம் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் சட்டப்பேரவை எவ்வளவு நாள்கள் நடக்கும் என முடிவு செய்யப்படும். ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ஆளுநர் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் போது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். அமைச்சர் உதயநிதிக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Share this post with your friends