Mnadu News

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் பூமிக்கு 40 கிலோ மீட்டர் அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி நான்கு அலகுகளாகப் பதிவாகி உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

Share this post with your friends