Mnadu News

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு.

ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆதப் பதிவாகி உள்ளதாகவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலநடுக்கம் நெமுரோ தீபகற்பத்தில் பூமிக்கடியில் 61 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய புவி அறிவியல் மற்றும் பேரழிவு பின்னடைவு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால்;, பல்வேறு இடங்களில் கட்டடங்கள் குலுங்கியது.இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுகத்தால் உயிர் சேதமோ அல்லது பெரியளவிலான சேதங்கள் குறித்து எந்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Share this post with your friends