Mnadu News

ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது: 13-லிருந்து 16 ஆக உயர்வு.

ஜப்பான் நாட்டின் பாலியல் குற்றச் சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த சட்டப்பூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது. தற்போது இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட மசோத ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தை ஜப்பானில் உள்ள மனித உரிமைகள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் வரவேற்றுள்ளன. இந்த மசோதாவின் மூலம் பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends