சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகிறது.முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர் ஒமர் அப்துல்லா பேசியதாவது: பிரிட்டி{க்கு எதிரான கருத்து வேறுபாடுகளால்தான் இந்தியா உருவானது. ஜனநாயகத்தின் சாரமே கருத்து வேறுபாடுதான். உலகிலேயே நாம்தான் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆனால், ஜனநாயகத்தின்படிதான் நாம் இயங்கிக்கொண்டிருக்கோமா? காஷ்மீரில் கல்வீச்சும், போராட்டங்களும் குறைந்துள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், சிறுபான்மையினரைக் குறிவைப்பது இன்னும் மாறவில்லை.,சட்டப்பிரிவு 370-ஐ பொறுத்தவரை காங்கிரஸக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. இதில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், காங்கிரஸை மட்டும் எதற்காக தனித்து குறிப்பிட வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நிற்கும் ஒரு அரசியல் கட்சியைக் காட்டுங்கள்?” என்றார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More