Mnadu News

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் கண்டி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது.இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதோடு, ஒரு அதிகாரி உள்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதையடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.அத்துடன், பாதுகாப்பு கருதி ரஜோரி மாவட்டத்தில் இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More